செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 20 நவம்பர் 2018 (08:03 IST)

மீடூவில் குதித்த ஆண்கள்: டெல்லியில் நடந்த விநோதம்

தற்பொழுது வரை பெண்கள் மட்டுமே மீடூ புகார் கூறி வரும் நிலையில் டெல்லியில் ஆண்களும் மீடூ புகார் கூறினர்.
நாடெங்கிலும் பெண்கள் தாங்கள் சந்தித்து வரும் பாலியல் தொல்லைகள் குறித்து மீடூவில் தைரியமாக வெளியே சொல்லி வருகின்றனர். சாதாரண பெண்கள் முதல் செலிபிரிட்டிக்கள் வரை மீடூவை கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் உலக ஆண்கள் தினமான நேற்று டெல்லியில் ஆண்கள் சிலர் பெண்கள் கூறும் மீடூவிற்கு எதிராக(Anti MeToo) பதாகைகளை ஏந்திக் கொண்டு சாலையில் போராட்டம் நடத்தினர்.
 
ஆண்களை பெண்கள் தேவையில்லாமல் குறை கூறாதீர்கள், கணவன்மார்களை ஏடிஎம் மெஷின் போல பயன்படுத்தாதீர்கள் என்று பதாகைகளை ஏந்திய படியும் முழக்கங்கள் இட்டபடியும் அவர்கள் ரோட்டில் போராட்டம் நடத்தினர். இந்த காட்சியானது தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.