1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu 3 students suffered from corona

தமிழகத்தில் 3 மாணவிகளுக்கு கொரோனா! – அடுத்தடுத்து அதிர்ச்சி!

Tamilnadu
தமிழகத்தில் பள்ளிகள் திறந்து இரண்டு நாட்களே ஆன நிலையில் மூன்று மாணவிகளுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதலாக பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில் நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அரியலூரில் வெவ்வேறு தனியார் பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும், 12ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மாணவிகள் கொரோனா பாதிப்புக்குள்ளாவது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
சீமான் பேச்சை கேட்டு சிரிப்போம், சீரியஸாக்க வேண்டாம்: அண்ணாமலை