இந்தியாவில் சிறுவர்களுக்கான தடுப்பூசி சோதனை! – கோபர்வேக்ஸுக்கு அனுமதி!
இந்தியாவில் 5 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த கோபர்வேக்ஸ் தடுப்பூசி சோதனைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன, இந்நிலையில் இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தடுப்பூசிகளை சோதனை செய்ய மூன்று நிறுவனங்களுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி வழங்கியுள்ளது.
அதை தொடர்ந்து பயாலஜிக்கல் இ எனப்படும் மருந்து நிறுவனத்தின் கோபர்வேக்ஸ் என்ற தடுப்பூசியையும் சிறார்களிடையே பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, மூன்றாவது அலையால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாரிப்பில் அரசு தீவிர கவனம் செலுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.