செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (11:10 IST)

அதிமுகவின் ‘தற்காலிக’ அவைத் தலைவர் நியமனம்!

அதிமுகவின் ‘தற்காலிக’ அவைத் தலைவர் நியமனம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதிமுகவிலிருந்து முன்னாள் எம்பி அன்வர்ராஜா நீக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதிமுக பொதுக் குழு இன்று கூடுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சற்றுமுன் கூடியுள்ள பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
அதிமுகவிலிருந்து அன்வர்ராஜா நீக்கப்பட்ட நிலையில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேன் என்பவரை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதிமுக அவைத்தலைவராக மதுசூதனன் இருந்த நிலையில் அவரது மறைவிற்கு பிறகு யாரும் அந்த பதவியில் நியமிக்கப்படாத நிலையில் தற்போது தமிழ்மகன் உசேன் அவைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது