செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (14:03 IST)

2026ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைக்குமா? செல்லூர் ராஜூ பதில்!

2026 ஆம் ஆண்டு பாஜக 150 இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும் என பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியது குறித்து செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கருத்து கூறியுள்ளார்
 
பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்பது அண்ணாமலை அவர்களின் ஆசை என்றும் அவரது ஆசையை விருப்பத்தை கூறியுள்ளார் என்றும் அவரது ஆசையை கூறுவதற்கு எந்தவித தடையும் இல்லை என்றும் கூறியுள்ளார்
 
ஆனால் அதே நேரத்தில் எப்பொழுது தேர்தல் வந்தாலும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் மாபெரும் வெற்றி பெறும் என்பது வரலாற்று உண்மை என்றும் செல்லூர் ராஜூ கூறினார் 
 
மேலும் அடுத்த தேர்தல் மிகவும் கண்ணியமாகவும் நியாயமாகவும் நடக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்