செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (11:28 IST)

நகர்புற உள்ளாட்சி தேர்தல் - அதிமுக விருப்ப மனு விநியோகம் தொடங்கியது!

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. 

 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் திமுக அமோக வெற்றியை பெற்றது. இதனைத்தொடர்ந்து அடுத்ததாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் அரசியல் கட்சிகளும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து அதிமுக அலுவலகத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனை குழு நடத்தப்பட்டது. இதன்பின்னர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கலாம் என அதிமுக அறிவித்தது. 
 
அதன்படி இன்று தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் மாவட்ட கட்சி அலுவலகங்களில் தொடங்கியுள்ளது. நவம்பர் 26 (இன்று) முதல் 29 வரை விருப்ப மனுக்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரஒ பெறலாம். விண்ணப்ப கட்டணங்கள் பேரூராட்சிக்கு 1,500, நகராட்சிகளுக்கு 2,500, மாநகராட்சிக்கு 5,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.