1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (13:44 IST)

எம்ஜிஆருக்கு சிறுநீரக தானம் செய்த லீலாவதி காலமானார்: அதிமுக இரங்கல்!

எம்ஜிஆருக்கு சிறுநீரக தானம் செய்த லீலாவதி காலமானார்: அதிமுக இரங்கல்!
முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு சிறுநீரக தானம் கொடுத்து அவரது உயிரை காப்பாற்றிய அவருடைய அண்ணன் மகள் லீலாவதி இன்று காலமானதை அடுத்து அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது.
 
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிறுநீரகம் கொடுத்தவர் லீலாவதி. கேரளாவில் இருந்த லீலாவதி தனது சித்தப்பா எம்ஜிஆருக்கு சிறுநீரகம் கொடுக்க சென்னை வந்தார் என்பதும் அவர் சிறுநீரகம் கொடுத்ததே பல மாதங்கள் எம்ஜிஆருக்கு தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவாக இருந்த லீலாவதி இன்று காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக இரங்கல் தெரிவித்து உள்ளது என்பதும் எம்ஜிஆர் உறவினர்கள் மற்றும் அதிமுகவின் தொண்டர்கள் மத்தியில் அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது