1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 29 பிப்ரவரி 2020 (09:14 IST)

தமிழிசை நெருங்கிய உறவினர் தூக்கில் தொங்கி தற்கொலை

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்றார் என்பது தெரிந்ததே. தெலுங்கானா மக்களின் அன்பையும் அரவணைப்பையும் அவர் பெற்று வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள தகவல் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அவரது குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் நெருங்கிய உறவினர் சண்முகநாதன் என்ற 25 வாலிபர் கோவையில் தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் திடுக்கிடும் செய்தி வெளிவந்துள்ளது 
 
இது குறித்த முதல் கட்ட விசாரணையில் சண்முகநாதனுக்கு அவரது பெற்றோர் கார் வாங்கிக் கொடுக்க மறுத்ததால் கோபத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலை செய்துகொண்ட சண்முகநாதன் என்பவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் மருமகளின் உடன் பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது
 
சண்முகநாதன் தற்கொலை குறித்த செய்தி அறிந்ததும் தமிழிசை சௌந்தரராஜன் கோவைக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது