மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சரவண பவன் – ஊழியர் தற்கொலையால் போராட்டம் !
சரவண பவன் மேலாளர் பழனியப்பன் மற்றும் ஊழியர்கள்
சரவண பவன் ஹோட்டல் கிளையின் மேலாளர் பழனியப்பன் நிர்வாகிகளின் நெருக்கடிக்கு ஆளாக்கியதால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சரவண பவன் உரிமையாளர் ஜீவஜோதி வழக்கில் தண்டனை பெற்று மரணமடைந்ததை அடுத்து இப்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கிளைகளில் அதன் ஊழியருக்கு சம்பளம் போடவில்லை என சொல்லப்படுகிறது.
இதனால் காஞ்சிபுரத்தில் உள்ள கிளைகளின் மேலாளர் பழனியப்பனை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இதனால் சிலருக்கு மட்டும் பழனியப்பன் சம்பளம் போட்டுள்ளார். இதையறிந்த சரவண பவன் ஹோட்டல் நிர்வாகிகள் பழனியப்பனுக்கு போன் செய்து தவறான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த மேலாளர் பழனியப்பன், வீட்டுக்குச் சென்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையறிந்த ஊழியர்கள் காஞ்சிபுரத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் காஞ்சிபுரத்தில் சிறுது நேரம் பரபரப்பான சூழ்நிலை உருவாகியது.