டோக்கன் கட்சியுடன் கூட்டணியா? தமிழிசை நக்கல் பதில்
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்தங்கள் பற்றியும் கூட்டணி பற்றியும் பேசியுள்ளார். இதில் காங்கிரஸ் மற்றும் அமமுகவை விமர்சித்துள்ளார்.
தமிழிசை இது குறித்து பேசியது விரிவாக, காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த கட்சி. இப்படி இருக்கையில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால், கடந்த் முறை கிடைத்த 40 இடங்களும் கிடைக்காமல் போய்விடும்.
காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே மூழ்கும் கப்பலாகத்தான் உள்ளது. அதனால், காங்கிரசுடன் யார் கூட்டணி வைத்தாலும் அவர்கள் மூழ்கித்தான் போவார்கள். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸின் தாக்கம் இருக்கவே இருக்காது.
பாஜக நாடாளுமன்ற தேர்தலுக்கு 6 மாதம் முன்பிலிருந்தே தயாராகி வருகிறது. அதேபோல், தமிழகத்தில் பாஜக பலம் பொருந்திய கட்சியாக உள்ளது. மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை என்கிறார் டிடிவி தினகரன்.
நாங்கள் ஊழல்வாதிகளுடனும், 20 ரூபாய் டோக்கன் கட்சியுடனும் கூட்டணி என சொன்னோமா? நீங்கள் என்ன எங்களை நிராகரிப்பது? நாங்கள் யாருடனும் கூட்டணி குறித்து பேசவில்லை. 22 மாநிலங்களை பாஜக ஆட்சி செய்கிறது. நாங்கள் ஒன்றும் சாதாரண கட்சி அல்ல. தமிழகத்திலும் கணிசமான இடங்களில் பாஜக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.