செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 20 அக்டோபர் 2018 (22:45 IST)

திமுக கூட்டணி உடையுமா? கமல் கருத்து குறித்து குஷ்பு

கடந்த வாரம் செய்தி தொலைக்காட்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல்ஹாசன், அதிமுகவை போலவே திமுகவுடன் கூட்டணி இல்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கின்றது என்றும் பேசினார்.

திமுக, காங்கிரஸ் கூட்டணி தற்போது பலமாக இருக்கும் நிலையில் அந்த கூட்டணி உடைந்தால் மட்டுமே கமல் சொல்வது சாத்தியமாகும். இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு, 'திமுகவுடன் கூட்டணி உடையும் என்று கமல் கூறுகிறார் என்றால் அது அவருடைய சொந்த கருத்து. அதேபோல் கூட்டணி வைக்க ரெடி என்றும் அவர்தான் சொல்லியிருப்பதால் காங்கிரஸ் கூட்டணியில் கமல் வந்தால் வரவேற்போம் என்று குஷ்பு தெரிவித்தார்.

ஏற்கனவே தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர், 'கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க ராகுல்காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.