செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 5 அக்டோபர் 2018 (13:03 IST)

நாங்க பேசி அவர் படத்தை ஓட வைக்க விரும்பல - விஜயை கலாய்த்த தமிழிசை

இனிமேல்தான் விஜயை போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 
சர்கார் பட விழாவில் பேசிய நடிகர் விஜய் “சர்கார் படத்தில் நான் முதல்வராக நடிக்கவில்லை. ஆனால், நான் முதல்வரானால் நடிக்க மாட்டேன். நான் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தால் ஊழலை ஒழிக்க பாடுபடுவேன்” எனக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பலரும் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
 
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் “தமிழகத்தை ஆண்ட அனைத்து முதல்வர்களும் மக்களுக்கு நன்மை செய்துள்ளனர். இனிதான் விஜய் போன்ற ஒருவர் சினிமாவில் இருந்து வந்து நல்லது செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவரது படம் வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில் அவரை பற்றி பேசி அவரது படத்தை ஓட வைக்க நாங்கள் விரும்பவில்லை” என அவர் கிண்டலாக பதிலளித்துள்ளார்.
 
மெர்சல் படம் வெளியான போது, அப்படத்திற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்படம் அதனாலேயே ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.