வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 4 அக்டோபர் 2018 (21:07 IST)

இதனால் தான் விஜய்யை வெறுக்கிறேன்: கருணாகரன் ஆவேச டுவிட்

சில ரசிகர்கள் மிக அசிங்கமாக டுவிட்டரில் பேசுவதால் தான் தான் விஜய்யை வெறுக்க ஆரம்பித்துவிட்டதாக நடிகர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
 
சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சொன்ன குட்டி கதை தலைவர்களுக்கு மட்டும்தானா, இல்லை நடிகர்களுக்குமா? என டுவிட்டரில் கருணாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மேலும் யாரையும் தவறாக பேச வேண்டாம் என,தனது ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ் செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
 
இதனிடையே சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை, விமர்சித்து கருத்து தெரிவித்த கருணாகரனை விஜய் ரசிகர்கள், சமூக வலைதளத்தில் கடுமையாக திட்டி வருகிறார்கள். மேலும் ட்விட்டரில் கருணாகரனுடன் விஐய் ரசிகர்கள் சண்டை போட்டு வருகிறார்கள்.