ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2024 (17:19 IST)

செய்யுளை தவறாக எழுதிய மாணவனை அடித்த தமிழாசிரியர்.. கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்..!

jail
செய்யுள் பாடலை தவறாக எழுதிய பிளஸ் டூ மாணவனை தமிழ் ஆசிரியர் அடித்த நிலையில் அந்த ஆசிரியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பொள்ளாச்சி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொள்ளாச்சி அருகே பல்லடம் சாலையில் தனியார் பள்ளி ஒன்று கடந்த பல வருடங்களாக இயங்கி வரும் நிலையில் இந்த பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த பள்ளியில் பிளஸ் டூ மாணவர் ஒருவர் தமிழ் பாடத்தில் புறநானூறு செய்யுள் பாடலை தவறாக எழுதியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தமிழ் ஆசிரியர் அந்த மாணவனை அடித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழாசிரியர் அடித்ததாக மாணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தமிழ் ஆசிரியர் சுரேஷ் குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கன்னத்திலும், தேர்வு எழுதும் அட்டையால் முதுகிலும் ஆசிரியர் அடித்ததாக மாணவரும் அவருடைய பெற்றோரும் புகார் அளித்ததை அடுத்து தமிழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran