சனி, 14 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 4 செப்டம்பர் 2024 (16:59 IST)

சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை.. விடுதி அறையில் சடலம் கண்டெடுப்பு..!

சென்னை ஓமந்தூரார் தோட்டம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் முதலாமாண்டு மாணவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் என்ற மருத்துவ கல்லூரி மாணவர் இன்று காலை விடுதி அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவ கல்லூரி மாணவி ஷெர்லின் என்பவர் 5ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று முன்தினம் விருதுநகரில் இளங்கலை மருத்துவம் முதலாம் ஆண்டு மாணவி ஆதி ஸ்ரீவிவேகா தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். அதேபோல் பொத்தேரியில் இன்று ஒரு மாணவர் கல்லூரி மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த நான்கு நாட்களில் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Edited by Siva