புதன், 9 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 4 செப்டம்பர் 2024 (07:30 IST)

கஞ்சா ரெய்டில் விசாரணை.. தனியார் கல்லூரி மாணவர் தற்கொலை

கஞ்சா ரெய்டு செய்த பின்னர் விசாரணை செய்ததால் தனியார் கல்லூரி மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன் செங்கல்பட்டு அருகே உள்ள தனியார் கல்லூரியில் கஞ்சா புழக்கம் இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்ததை அடுத்து அதிரடியாக கல்லூரி மாணவர்களை விடுதியில் சோதனை செய்யப்பட்டது. 
 
இந்த சோதனையில் கஞ்சா உள்பட போதைப் பொருள்கள் சிக்கியதாகவும் இதனை அடுத்து சில மாணவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததாகவும் செய்திகள் வெளியானது. 
 
இந்த நிலையில் விசாரணை செய்யப்பட்ட மாணவர்களின் ஒருவர் போலீஸ் விசாரணைக்கு பின் மன உளைச்சலில் இருந்ததாகவும் இதனையடுத்து  திடீரென அவர் கல்லூரியின் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது. இந்த அதிர்ச்சி சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 
 
Edited by Siva