திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2020 (21:28 IST)

பிரபல நடிகரின் படத்தின் பெயர் மற்றும் ரிலீஸ் தேதி மாற்றம் !!!

சிவாஜியின் பேரனும் நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பேச்சி. இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தைப் பொங்கலுக்கு சன் டிவியில் ரிலீஸ் செய்து பின்னர் இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியிடவும் திட்டமிட்டனர்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகள் இருப்பதால் தியேட்டரில் 50% ரசிகர்கள் வருகைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே வரும் டிசம்பர் 25 ஆம் தேதி அல்லது ஜனவரி 1 ஆம் தேதி பேச்சி படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதாக இருந்தனர். ஆனால் படத்தின் பணிகள் இன்னும் முடியவில்லை எனத் தெரிகிறது.

மேலும், இப்படத்திற்கு தற்போது புலிக்குட்டிப் பாண்டி என்று பெயர் மாற்றியுள்ளனர். இப்படம் பொங்கல் வெளியீடாக சன் டிவில் வெளியாவது உறிதியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்