புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 24 டிசம்பர் 2020 (23:52 IST)

’’அவருடைய மாணவன் நான்’’… ’’இது ட்வீட்டில் அடங்காத் துயரம்’’ – தொ.பரமசிவன் மறைவுக்கு சீமான, கமல் இரங்கல்

தமிழகத்தின் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசின் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.இவரது மறைவுக்கு நடிகர், கமல், சீமான் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர்  பக்கத்தில், ’’தொ. பரமசிவன் மறைந்தார். வருந்துகிறேன். இன்னொரு தொ.பரமசிவன் உருவாக வேண்டும் என்று ஆவலாக காத்திருக்கிறேன்.  இது ட்வீட்டில் அடங்காத் துயரம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ’’நான் அவருடைய மாணவன் என்ற திமிர் உள்ளது. நான் இளங்கலைப் பொருளாதார மாணாவனாக இருந்தாலும் என்னுடைய தமிழ் உணவுக்கு பேரா.தொ.பரசிவம்தான் காரணம்’’ எனத் தெரிவித்துள்ளார்.