1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. actres topsy make fun comment about modi

நான் உயிரோட இருக்கணும்!. அதனால் மோடியை ஆதரிக்கிறேன்!.. டாப்சி ராக்ஸ்!...

topsy
வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் டாப்ஸி. அதன்பின் பல தமிழ் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடிக்க சென்றார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள ஆஷி வருகிற 20ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில்தான், அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அவரிடம் கேட்ட ஒரு கேள்விக்கு மிகவும் நக்கலாக பதில் சொல்லியிருக்கிறார்..

அதாவது ‘நரேந்திர மோடி, ராகுல் காந்தி ஆகிய இருவரில் உங்களுக்கு பிடித்த அரசியல் யார்?’ என்ற கேள்விக்கு ‘நான் இனியும் இந்த நாட்டில் வாழ வேண்டும்.. அதனால் எனது பதில் மோடி’ என்று சொன்னார். டாப்ஸி.  இந்த பதில் இந்திய அளவில் கவனம் பெற்றிருக்கிறது. பிரதமர் மோடி இருந்தால்தான் நிம்மதியாக வாழ முடியும் என டாப்ஸி சொல்லியிருக்கிறார் என பாஜகவினர் புரிந்து கொண்டார்கள்..

மற்றவர்கள் ‘மோடியை எதிர்த்து பேசினால் சும்மா விட மாட்டார்கள். பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதைத்தான் டாப்ஸி இப்படி நக்கலடித்திருக்கிறார் என சொல்கிறார்கள். கொரோனா காலத்தில் பிரதமர் மோடி அனைவரையும் ‘வீட்டில் விளக்குகளை அனைத்தும் மொட்டை மாடியில் வந்து மெழுகுவர்த்தி ஏற்றுங்கள், சத்தங்களை எழுப்பி கொரோனாவை விரட்டுங்கள்’ என சொல்லியிருந்தார். அதை பலரும் செய்தார்கள். அப்போதே ‘போ.. போ.. நம் அனைவருக்கும் புதிய வேலை வந்துவிட்டது போ.. போ’ என் டிவிட்டரில் டாப்ஸி நக்கலாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
நெருங்கும் தேர்தல்!. நாளை இடைக்கால பட்ஜெட்!. முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?..