செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2020 (21:36 IST)

கோவிலுக்கு வந்த வயதான பெண்ணை முதுகில் சுமந்து சென்ற காவலர் !!

இந்த உலகில் தலைசிறந்தது என நாம் கருதும் மனிதநேயத்தை நாம் எதாவது ஒரு வகையில் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். அந்தவகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நடந்து சென்ற 58 வயது பெண் பக்தர் ஒருவர் அங்குள்ள மலைச்சரிவில் மயக்கம் வந்து கீழே விழுந்தார்.

அதைப் பார்த்த பணியில் இருந்த காவலர் ஷேக் அர்ஷாத் என்பவர் உடனே அப்பெண்ணைத் தனது முதுகில் வைத்து சுமர் 6.கிமீ தூரம் சுமர்ந்து சென்று அவருக்கு தக்க மருத்துவ உதவி செய்துள்ளார்.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பெண்ணை சுமந்து சென்ற காவலரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.