1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have rain within 24 hours

24 மணி நேரத்தில் கனமழை பெரும் மாவட்டங்கள் இவைதான்...

சென்னை
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 
கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
 
சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
இந்த நேரத்துல வரிவசூல் அவசியமா? தள்ளி வைங்க! – மு.க.ஸ்டாலின் கோரிக்கை