1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have rain today

இன்றும் மழைக்கு வாய்ப்பு: வெதர் ரிபோர்ட்!!

மழை
நேற்று போல இன்றும் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
நேற்று தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதேபோல சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் மழை பெய்தது. 
சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், திருவொற்றியூர், ஓ.எம்.ஆர், வேளச்சேரி, வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அதேபோல சேலம், கோவை, விழுப்புரம், ஈரோடு, தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்தது. 
 
இந்நிலையில் இன்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
புனித வெள்ளி வழிபாடுகள் ரத்து: வெறிச்சோடிய தேவாலயங்கள்!