ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (09:27 IST)

கொரோனா பரவ இவர்கள் அலட்சியம்தான் காரணம்: 66 பேர் மீது வழக்குப்பதிவு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ காரணமாக இருந்த 33 வெளிநாட்டு மதகுருமார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மட்டுமல்லாது, பல்வேறு நாடுகளிலும் இருந்து மதகுருமார்கள் வந்துள்ளனர். மாநாடு முடிந்த பிறகு சொந்த நாட்டுக்கு திரும்பாமல் மத பிரசங்கம் நடத்துவதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் அவர்கள் பயணித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவிக்கொண்டிருந்த நிலையில் அலட்சியமாக செயல்பட்ட மதகுருமார்களால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. பயணிகள் விசாவில் இந்தியா வருபவர்கள் மத பிரச்சாரம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட சட்டப்படி தடை உள்ளது. ஆனால் அதை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக 33 வெளிநாட்டு மதகுருமார்கள் மீதும், அவர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்ததற்காக தமிழக மதகுருமார்கள் 33 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.