செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (10:14 IST)

பீனிக்ஸ் மால் சென்ற தம்பதியினருக்கு கொரோனா – அதிகரிக்கும் எண்ணிக்கை!

சென்னை பீன்க்ஸ் மாலில் பணிபுரிந்த பெண்ணுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் தற்போது அங்கு ஷாப்பிங் சென்ற தம்பதியினருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வரும் சூழலில் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மற்ற மாவட்டங்களை விட அதிகரித்து வருகிறது. சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ்மால் வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் பணிபுரிந்த இருவருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அதை தொடர்ந்து கடந்த மாதம் 10 முதல் 17 வரை பீனிக்ஸ் வணிக வளாகத்திற்கு சென்றவர்கள் கண்டறியப்பட்டு மருத்துவ சோதனை செய்யப்பட்டது. 3 ஆயிரத்திற்கும் அதிகமானோரை பரிசோதித்ததில் யாருக்கும் கொரோனா இல்லை என கண்டறியப்பட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று ஒரேநாளில் சென்னையில் 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் ஒரு தம்பதினர் கடந்த மாதம் பீனிக்ஸ் வணிக வளாகத்திற்கு சென்று வந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.