1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have rain for 5 days

தமிழகத்தில் 5 நாட்களுக்கு தொடரும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகம்
தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

 
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
 
ஆம் அதன்படி தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டுக்கல்லில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாட்டில் இ - பதிவு, இ - பாஸ் முறை ரத்து !