1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By sinoj
Last Modified: சனி, 3 ஜூலை 2021 (00:32 IST)

வீட்டில் செல்வம் நிலைக்க

வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமம் தண்ணீரும் வழங்க வேண்டும். அவங்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும் பொருளும் சந்தோஷமும் பெருகும்.
 
அதிகாலை விழித்தவுடன் பசுவையாவது. தன் முகத்தையாவது, தன் வலது உள்ளங்கையையாவது முதல் பார்த்துவிட வேண்டும்.
 
 
நகத்தை பல்லால் கடிப்பவரிடம் மூதேவி ஸ்திரமாக வாசம் செய்கிறாள். அடிக்கடி கை விரல்களை நெறித்து கொள்பவர்களிடம் கொடூரம்,  தாரித்ரியமும் வாசம் செய்யும்.
 
அதிகாலை கொல்லைப்புற வாசலைத் திறந்து வைத்து அதன் பின்னரே தலைவாசலைத் திறக்க வேண்டும்.
 
பெண்கள் காலையில் முதலில் வீட்டு கதவை திறக்கும் பொழுது அஷ்டலக்ஷ்மிகளின் திருநாமத்தை உச்சரித்தபடி திறந்தால்  அஷ்டலட்சுமிகளும் வீட்டிற்குள் நுழைவர்.
 
துரும்பு, தர்ப்பம், புஷ்பம் இவைகளை நகத்தால் கிள்ளக் கூடாது. பூஜை செய்த பழங்களை நகம் படாமல் உரிக்க வேண்டும். அரைத்த  சந்தனத்தை நகத்தால் வைத்தல் கூடாது. பூவை நகத்தை பயன்படுத்தி சுவற்றிலோ, தரையிலோ வைத்து துண்டிக்க கூடாது.
 
நம் ஊர் அல்லது வீட்டிற்கு பின்புற வழியாக வெளியே போகக்கூடாது. தூங்குபவர்களை எழுப்புவது மஹா பாவம். இந்திரியங்கள் எல்லாம்  மனதில் ஒடுங்கும். எனவே அவசரமாக தூக்கத்தில் எழுந்தால் மனந்திரிந்து கண், காது சக்தி மூக்கிலும் புகும். இதனால் குருடு, செவிடு ஆக  நேரும்.
 
பிறருடைய ஆடை, செருப்பு, மாலை, எச்சில் பாத்திரம், பலகை, படுக்கை, ஆகியவற்றை உபயோகித்தால் நோயுடன் பாவம் சேரும்.