1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today gold price in Chennai

ஏறவும் இல்லை, இறங்கவும் இல்லை..! – தங்கம் விலை நிலவரம்!

Tamilnadu
கடந்த மூன்று நாளாக வேகமாக விலை உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று ஏற்ற இறக்கமின்றி நேற்றைய விலைக்கு விற்பனையாகி வருகிறது.

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.  

இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை தீபாவளிக்கு பிறகு ஒரு வாரத்திற்கு விலையில் சரிவை சந்தித்தது. இந்நிலையில் கட்ந்த மூன்று நாட்களாக விலை உயர்ந்த தங்கம் விலை இன்று மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ. 37,128-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமிற்கு ரூ.30 உயர்ந்து ரூ. 4,641-க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்றும் நேற்றைய விலைக்கே மாற்றமின்றி தொடர்ந்து விற்பனையாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
கல்வான் பள்ளத்தாக்கு யுத்தம்; ஃபாஜி கேமுக்கு குவிந்த முன்பதிவுகள்! – அதிர்ந்த ப்ளேஸ்டோர்!