இப்படிப்பட்ட நண்பர்களைதான் நான் எதிரிகளாக காட்டப்போகிறேன் – இயக்குனர் டிவீட்!

Last Modified வெள்ளி, 4 டிசம்பர் 2020 (11:07 IST)

ஆர்யாவும் விஷாலும் மாறி மாறி தங்களை பற்றி புகழ்ந்து பேச அதற்கு அவர்கள் நட்பைப் பற்றி இயக்குனர் ஆனந்த் ஷங்கர் டிவீட் செய்துள்ளார்.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான காலா திரைப்படத்துக்கு பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின் ’’சார்பேட்டா பரம்பரை’’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
இதில் ஆர்யா பாக்ஸராக நடித்து உள்ளார். இப்படத்திற்காக அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

கொரொனா கால ஊரடங்கு சில தளர்களுடன் அமலில் உள்ள நிலையில். திரைப்படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்து. இப்படத்தின் சென்னையை அடுத்த ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வரும் நிலையில், இன்று பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து பாக்ஸ்ர் தோற்றத்துக்கு மாறியிருந்த ஆர்யாவின் உடலைமைப்பை பற்றி விஷால் பாராட்ட, அதற்கு பதிலளித்த ஆர்யா விஷால் எப்போதும் தன்னை விட 10 படிகள் முன்னெ இருப்பதாக தெரிவித்திருந்தார். இப்படி இவர்கள் இருவரும் மாறி மாறி நட்பு பாராட்டிக் கொள்வதை பார்த்த இயக்குனர் ஆனந்த் ஷங்கர் ‘இப்படிப்பட்ட நண்பர்களை தான் நான் என் படத்தில் எனிமிகளாக காட்ட உள்ளேன்’ எனக் கூறியுள்ளார். விஷால் நடிக்கும் எனிமி படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :