1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tamil nadu to have rain

நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை!

தமிழகம்
தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல். 

 
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக சில பகுதிகளில் மழை கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்தது. 
 
ஆம், நாளை முதல் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. சென்னையில் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல் அளித்தது.
அடுத்த கட்டுரையில்
யுக்ரேனின் தாக்குதலில் தூள்தூளாகும் ரஷ்ய டாங்கிகள் - காரணங்கள் என்னென்ன?