1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have rain

அடுத்த 24 மணி நேரத்துக்குள் 6 மாவட்டங்களில் கனமழை

மழை
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்குள் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

 
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்குள் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரத்தில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
About Writer
Sugapriya Prakash