1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have heavy rain

தமிழகத்தில் அதிகபட்ச மழை பதிவு எங்கே?

தமிழகம்
தமிழகத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை, சீர்காழியில் தலா 5 செ.மீ. மழை பதிவானது என வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
வடகிழக்கு பருவமழை முடிந்துவிட்ட நிலையில் திடீரென வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து இன்று தமிழகத்தில் கரை கடந்தது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.
 
முக்கியமாக டெல்டா பகுதிகளான நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மாலை முதலாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை, சீர்காழியில் தலா 5 செ.மீ. மழை பதிவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுக்கூர், சிதம்பரத்தில் தலா 4, அதிராம்பட்டினம், மன்னார்குடி, அண்ணாமலைநகரில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.  
அடுத்த கட்டுரையில்
உக்ரைனின் மேலும் 4 இடங்களில் போர் நிறுத்தம்! – ரஷ்யா அறிவிப்பு!