1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have heavy rain

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

தமிழகம்
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

 
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் மழை குறைந்திருந்தாலும் சில பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
 
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி இன்று கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறியுள்ளது.