புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 டிசம்பர் 2021 (09:19 IST)

தமிழகத்தில் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை; 7,466 பேர் வீட்டுத்தனிமையில்..!

தமிழகத்தில் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

உலக நாடுகள் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழகத்தில் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனையில் 9 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது மாதிரிகள் ஆய்வு கூடங்களுக்கு அனுப்பப்பட்டன. ஆனால் அவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று இல்லை என முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுதவிர ஒமிக்ரான் பரவிய நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 7,466 பயணிகள் வீட்டுத்தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.