1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TAMIL-NADU-TEACHERS-PROTEST-EIGHTH-DAY-OPS-AND-EQUAL-PAY-2026

முதல்வரின் அறிவிப்பை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை.. ஜாக்டோ ஜியோ தகவல்..

தமிழ்நாடு ஆசிரியர்கள் போராட்டம்
தமிழகத்தில் 'சம வேலைக்கு சம ஊதியம்' மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று எட்டாவது நாளை எட்டியுள்ளது. 
 
கடந்த எட்டு நாட்களாக போராட்டம் நீடித்து வரும் நிலையில், அரசின் தரப்பிலிருந்து இதுவரை சாதகமான அறிவிப்பு ஏதும் வெளியாகாதது ஆசிரியர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 22 ஆண்டுகால நீண்ட போராட்டத்திற்கு பிறகு, பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முதல்வர் ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுப்பார் என நம்புவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். முதல்வரின் அறிவிப்பு மற்றும் அரசாணையை பொறுத்தே தங்களது அடுத்தகட்ட போராட்டத்தின் வீரியம் அமையும் என்றும் அவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
 
இதற்கிடையில், வரும் ஜனவரி 6-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கப்போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு ஏற்கனவே அறிவித்துள்ளது. 
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
சென்னை மாநகராட்சி ஆணையர் வீட்டை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்.. அதிரடி கைது..!