1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu Rain Alert: Next 3 Hours Forecast

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

Tamil Nadu Rain Update
இன்றிரவு  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதன் காரணமாக இந்த மழைக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்றிரவு பின்வரும் மாவட்டங்கள் மற்றும் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்:
 
செங்கல்பட்டு
 
நாகப்பட்டினம்
 
கன்னியாகுமரி
 
திருநெல்வேலி
 
தென்காசி
 
தேனி
 
கோயம்புத்தூர்
 
விருதுநகர்
 
திருப்பூர்
 
கடலூர்
 
மயிலாடுதுறை
 
திருவாரூர்
 
விழுப்புரம்
 
யூனியன் பிரதேசப் பகுதிகள்: புதுச்சேரி மற்றும் காரைக்கால்
 
இன்று  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாட்டுக்கு இன்றும் நாளையும் ஆரஞ்சு அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் தகவல்