சென்னை உள்பட 27 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று ) சென்னை உட்பட 27 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன.
வடகிழக்குப் பருவமழைக் காலம் என்றாலும், கடந்த இரண்டு நாட்களாக கடுமையான பகல் நேர வெயிலுக்குப் பிறகு, மாலை நேரங்களில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இன்றும் பல மாவட்டங்களில் லேசாகவும், சில இடங்களில் ஒரு மணி நேரம் வரை தீவிரமாகவும் மழை தொடர வாய்ப்புள்ளது.
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், காரைக்கால், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி, திருப்பத்தூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஆங்காங்கே மழை பெய்யும், பிறகு இடைவெளி இருக்கும்.
நவம்பர் இறுதி வாரத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. எனினும், இந்த மாதம் ஒட்டுமொத்த மழையளவு இயல்பை விடக் குறைவாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran