வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சென்னை மாநகரம் மற்றும் அதன் அருகில் உள்ள புறநகர்ப் பகுதிகளில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் மியான்மர் கடற்கரையையொட்டி நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் நகர்வு காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை நகரின் சில பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Siva