நாளை ஹரிகோட்டாவில் கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 430 கி.மீ மற்றும் புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 420 கி.மீ மையம் கொண்டுள்ளது.
நாளை அதிகாலை மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வட தமிழகக் கடற்கரையை அடைய வாய்ப்புள்ளது.
அதன்பின் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து காரைக்கால் இடையே வட தமிழகம் மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது மற்றும் புதுச்சேரிக்கு வடக்கே ஸ்ரீஹரிகோட்டா அருகில் 11ம் தேதி மாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் விளக்கம் கொடுத்துள்ளது.