திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 அக்டோபர் 2022 (17:48 IST)

திமுக தலைவர் தேர்தல்: போட்டியின்றி தேர்வான முக ஸ்டாலின்!

MK Stalin
திமுக தலைவர் தேர்தல் வரும் அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று அதற்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது 
 
இன்று மாலை 5 மணிக்குள் ஒன்றுக்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தால் தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மட்டுமே திமுக தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதை அடுத்து அவர் போட்டியின்றி திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது
 
இதனை அடுத்து திமுக தலைவராக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Mahendran