திமுக தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிகளுக்கு வேட்புமனு!
திமுக பொதுக்குழு வரும் 9ஆம் தேதி கூட இருக்கும் நிலையில் அன்றைய தினம் திமுகவின் புதிய தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் உள்பட பல்வேறு பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அக்டோபர் 7 முதல் திமுக தலைவர் பதவி உள்பட பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது
இதனை அடுத்து திமுக தலைவர் பதவிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார். அதேபோல் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலு ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்
இவர்கள் மூவரையும் எதிர்த்து வேறு யாரும் போட்டியிட வாய்ப்பு இல்லை என்பதால் மூவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து திமுக துணைப் பொதுச் செயலாளர் உட்பட பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Edited by Mahendran