கெட்டுப்போன உணவால் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு உதவி: முதல்வர் அறிவிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு உண்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து அந்த காப்பகத்தில் செய்யப்பட்ட உணவை பரிசோதனை செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சிறுவர் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு கொண்டு உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அளிக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் செய்துள்ளார்.
மேலும் இந்த உணவைச் சாப்பிட்டு உடல் நலக்குறைவால் சிகிச்சையில் உள்ள சிறுவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கவும் அறிவுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran