1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu explains about cough syrup

சர்ச்சைக்குரிய இருமல் மருந்து விற்கப்படுகிறதா? அரசு விளக்கம்!

மெய்டன் பார்மா நிறுவனம்
சர்ச்சைக்குரிய மெய்டன் பார்மா நிறுவனம் தயாரித்த இருமல் மருந்துகள் தமிழகத்தில் எங்கும் விற்கப்படவில்லை என விளக்கம்.

இந்தியாவில் தயாரான இருமல் சிரப்பை குடித்த 66 காம்பியா குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்களில் பல்வேறு விதமான அத்தியாவசிய மருந்துகள் தயாரிக்கப்படும் நிலையில் அவை உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அவ்வாறாக காம்பியா நாட்டிற்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான இருமல் சிரப்பை குடித்த 66 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வகத்தில் இருமல் சிரப்பை ஆராய்ந்த போது, அதில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக டை எதிலின் க்ளைகால் மற்றும் எத்திலின் க்ளைகால் கண்டறியப்பட்டது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியான Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup, Magrip N Cold Syrup என்ற இந்த 4 சிரப்புகளிலும் வேதியியல் பொருட்கள் நிர்ணயித்த அளவை விட அதிகமாக கலந்திருந்தது தெரிய வந்துள்ளது. இந்த சிரப்புகளை ஹரியானாவை சேர்ந்த மெய்டன் பார்மாசூட்டிக்கல் நிறுவனம் தயாரித்தது.

இதுகுறித்து இந்திய மருத்து தர நிர்ணய ஆணையம் மற்றும் மெய்டன் பார்மாசூட்டிக்கல் நிறுவனத்திற்கு உலக சுகாதார அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சர்ச்சைக்குரிய மெய்டன் பார்மா நிறுவனம் தயாரித்த இருமல் மருந்துகள் தமிழகத்தில் எங்கும் விற்கப்படவில்லை என மருந்து கட்டுப்பாட்டுத்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் அந்த மருந்துகள் எங்கும் விற்கப்படாத நிலையில் தொடர்ந்து கள ஆய்வு நடத்தப்படும் என அரசு விளக்கம் அளித்துள்ளது.
About Writer
Sugapriya Prakash