வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2024 (17:25 IST)

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக வருகை புரிந்தார். அவருக்கு காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டது.
 
மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையர் அஜய் பட்நாக்கர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 
மேலும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், துணை ஆணையர் ஸ்டாலின் உட்பட கோவை மாநகர காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
 
சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சங்கர் ஜிவால் ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.