ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2024 (17:15 IST)

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Rahul Gandhi
மோடியின் சக்கர வியூகத்தை ஹரியானா மக்கள் உடைப்பார்கள் என தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து மேலும் பேசியபோது, சமீபத்தில் கோஹானாவில் சுவையான ஜிலேபிகள் பற்றியும், அவற்றை அதிக அளவில் விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் பற்றியும் பேசியிருந்தேன்.

இந்தியாவில் 5500 சிறு வணிகர்கள் இருக்கும் நிலையில், அவர்களுக்கு சரியான ஆதரவளித்தால் தங்கள் பொருட்களை உலக அளவில் வணிகப்படுத்த முடியும். நிதி, தொழில்நுட்பம், நெட்வொர்க் தொடர்புகள், விளம்பரம் ஆகியவை சிறந்த நிறுவனமாக மாறுவதற்கு தேவையான கொள்கைகள். இந்த ஆதரவு இருந்தால் நமது மிட்டாயை மட்டுமல்ல, சோப்பு, ஆப்பிள், ஜீன்ஸ், செருப்புகள், அண்ணாச்சி பழம் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் உலக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.

ஒரு சில நண்பர்களின் நிறுவனங்களில் மட்டும் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, சிறு வணிகர்களையும் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களுக்கு தேவையான வேலை வாய்ப்புகள் உருவாக்குவது மிகவும் முக்கியம். இளைய தலைமுறையின் தேவைகளை பூர்த்தி செய்து, இந்தியாவின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்.

மோடியின் 'நட்பு முதலாளித்துவ' கொள்கை, அந்த சக்கர வியூகத்தை உடைக்க, ஹரியானா மக்கள் அடுத்த அடியை அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். இந்த நிலையில், ஹரியானாவில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran