1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2024 (17:18 IST)

பிக்பாஸ் சம்யுக்தா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் "மெட்ராஸ் மாஃபியா கம்பெனி"

ஆனந்த் ராஜ் மற்றும் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
 
'மெட்ராஸ் மாஃபியா கம்பெனி' என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. 
 
அறிமுக இயக்குநர் ஏ.எஸ். முகுந்தன் இயக்கும் இந்தப் படத்தை அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி. சுகந்தி அண்ணாதுரை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஆனந்த் ராஜ் தாதாவாகவும், சம்யுக்தா போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கின்றனர். 
 
வடசென்னை கதைக்களத்தில் ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் அதிரடி மாற்றங்களை விறுவிறுப்பான திரைக்கதையுடன் சுவாரஸ்யமாக சொல்லும் படமாக 'மெட்ராஸ் மாஃபியா கம்பெனி' உருவாகிறது. 
 
இந்தப் படத்தில் முனீஸ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ் மற்றும் ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
 
இந்தப் படத்திற்கு அஷோக் ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். கலை இயக்குநராக ராகவா குமார், படத்தொகுப்பு பணிகளை தேவராஜ் மேற்கொள்கிறார். இந்தப் படத்தின் கதையை சுகந்தி அண்ணாதுரை எழுதியுள்ளார். 
 
தீனா, ராதிகா நடன இயக்குநர்களாக பணியாற்றியுள்ளனர். பாடல்களை கு. கார்த்திக் எழுதியுள்ளார். தயாரிப்பு மேற்பார்வை பணிகளை ரகு மேற்கொள்கிறார்.