1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu 5 districts to have rain

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

தமிழகம்
சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தகவல். 

 
தமிழகத்தில் இன்று மழை குறித்த விபரங்களை தினந்தோறும் அறிவித்து வரும் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. 
 
தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 
 
இதேபோல நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
தங்கத்தின் விலை இன்னும் அதிரிக்கும்... இறக்குமதி வரி உயர்வு!