1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 30 ஜூன் 2022 (18:49 IST)

தமிழகத்தில் பாஜகவால் எதுவும் செய்ய முடியவில்லை: யஷ்வந்த் சின்ஹா

yashwanth
தமிழகத்தில் பாஜகவால் எதையும் செய்ய முடியவில்லை என எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார் 
 
இன்று சென்னை வந்த யஷ்வந்த் சின்கா தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் நாம் உள்ளோம் என்றும் அதற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலை சாட்சி என்றும் கூறினார்
 
பல மாநிலங்களில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் பாஜகவுக்கு தமிழகத்தில் அது சாத்தியமாகவில்லை என்றும் தமிழகத்தில் பாஜகவால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் அவர் புகழாரம் சூட்டினார் 
 
மேலும் தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் வருத்தமளிக்கும் வகையில் உள்ளன என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிப்பு ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த.