வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 30 ஜூன் 2022 (21:00 IST)

பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Face Mask
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளில்  கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
 
தமிழகத்தில் இன்று சென்னையில் ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பதும் தமிழகத்தில் 2000க்கும் மேல் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது 
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் நாளை இது குறித்து முக்கிய ஆலோசனை செய்ய இருக்கும் நிலையில் பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது 
 
அதன்படி பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளி ஊழியர்கள் என அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பின்பற்றாதவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது