செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 29 ஏப்ரல் 2020 (19:48 IST)

ஐநா., அமைப்புக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினராக தமிழர் நியமனம்!

ஐநா., அமைப்புகள் உலக நாடுகளுக்கு எல்லாம் ஒரு இணைப்புப் பாலமாக செயல்படுகிறது. உலக நாடுகளில் உள்ள பிரச்சனைகளில் தலையிட்டு சுமுகமாகத் தீர்த்து வைக்கும அமைப்பாகச் செயல்படுவருகிறது.

இந்நிலையில், ஐநா அமைப்புகான இந்தியாவின் நிரந்தர உறுப்பினராக தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளியுறவுத் துறையில் செயலாளராகப் பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவர் ஐநா அமைப்புக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தமிழர்களுக்கான உலக அளவில் கிடைத்துள்ள உயரிய அங்கீகரமாகப் பார்க்கப்படுகிறது.