1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 29 ஏப்ரல் 2020 (19:40 IST)

தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா உறுதி
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் இன்று 104 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக சுகாதாரத்துறை சற்றுமுன் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2162ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 104பேர்களில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 94 பேர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 768ஆகவும் உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையை அடுத்து செங்கல்பட்டில் 4 பேர்களுக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேர்களுக்கும், விருதுநகரில் இருவருக்கும் திருவாரூரில் ஒருவருக்கும் இன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் இன்று புதியதாக யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 82 என்றும், தமிழகத்தில் இன்று 8087 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 109,961 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது